Maathrukaawak nethi Maathrubhuumiya in Tamil

POEM – MAATHRUKAAVAK NETHI MAATHRU BOOMIYA IN TAMIL
TRANSLATED BY M.RISHAN SHAREEF

மொழிபெயர்ப்புக் கவிதை

தலைப்பொன்று இல்லாத தாய்நிலம்

தமிழ் மண்டைகளுக்கு
விளையாட்டாக வெடி வைக்கும்
இளைய இராணுவத்தினரே
மென்மையானவையா அந்த ஆயுதங்கள்

சூதாட்டத்துக்கு இடம் திறந்த
குரூர யுத்த நிலக் கிடங்கு
சீட்டுக்கட்டுகளுக்கு அருகில்
சீட்டாட்டக்காரர்கள் நிதமும்

கட்டிப் போட்டாலும் இரு கண்களை
விரியும் இரு விழிகள்
பல்லாயிரக்கணக்கிலாகும்
கட்டிப்போட்டாலும் இரு கரங்களை
கையை மடக்கித் துணியும் இரு கரங்களும்
பல்லாயிரக்கணக்கில்

நிர்வாணமாக குண்டு துளைக்கும்
துளைத்து தாய்நிலத்தை முத்தமிடும்
மனித வாயொன்றிலிருந்து எழும்
இறுதி வேண்டுதலினூடு
நிர்வாணமாயுள்ளது யுத்த ஆடை

தமிழ் மண்டைகளுக்கு
விளையாட்டாக குண்டு வைக்கும்
இளைய இராணுவத்தினரே
மென்மையானவையா அந்த ஆயுதங்கள்

மூலம் – மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

“Thaaththaa saha Hima” in Tamil

அப்பாவும் பனியும்

அப்பாவும் பனியும்
(வாழ்வில் முதல்முறையாக பனியைக் கண்டது அப்பாவின் பிறந்த தினத்தன்றே)

அப்பா சொல்லித் தந்த கதையொன்றில்
பனி உறைந்திருந்தது

செந்நிறப் படைவீரனொருவன்
பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான்
துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால்
வெண் பனிக்கட்டிகளின் மீது
செந்நிற வழித்தடம் உண்டானது
வேதனை வழிகி்ன்ற
அப்பாவின் குரலுக்கு
சிறுவன் என்றாலும் என் மனது நொந்தது

பனி போர்த்திய சமதரையொன்றில்
அவருடன் பனியில் விளையாடிக்கொண்டிருந்த இடைவேளையில்
வேலை நிறுத்தக்காரரான எனது அப்பா
சைபீரியாவுக்கு அனுப்பிய கடிதம் தபாலில் கிடைத்தது
இறுக மூடப்பட்டிருந்த இடது கைக்குத் துணையாக
சிறிய கரமொன்று இணைந்திருந்தது

ஸ்டெப்ஸ் புல்வெளியை விடவும் நீளமான பசி
பனியைப் போல மனதில் இறுகிப்போனது
சிறிய மனதால் தாங்கவே முடியாமற் போகும்
கணமொன்றும் இருந்தது
அப்பாவின் பனி உறைந்த விழிகளின் தைரியத்தில்
பனிப் பந்தொன்றுக்கு உதை கிடைத்தது

ஆனாலும் நாம் பனியிடையே தரித்தோம்
எமது முழங்கால்கள் வரை கால்கள் புதைந்தன

வெந்நீர்ப் பானையிலிருந்து எழுந்து வந்த ஆவியில்
சீனியில்லாத தேனீர்ச் சாயத்தின் சுவை நிரம்பியிருந்தது
தேனீரின் நறுமணத்தில் திறபட்ட
சாயமற்ற விழிகள் இரண்டுக்கு
கவிதை எழுதும் வழித்தடங்கள் தென்பட்டன

*இர்த்து ஊடாக நெடுந் தூரம் நடந்த
காரிருளால் முடிச்சுகளும் கேசத்தின் அலைகளும் நிறைந்த
அந்தத் தலையில் பனி இதழ்கள் உறைந்தன
ஆனாலும் அந்தக் குரலின் கூர்மை பிரகாசித்தது
அந்தக் குரலில் கதையொன்று கேட்டது

கதையில் பனி உறைந்திருந்தது

மூலம் : மஞ்சுள வெடிவர்தன (சிங்களமொழி மூலம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான்,

இலங்கை

* இர்த்து – பிரேசில் அருகே உள்ள ஓரிடம்

நன்றி
# உன்னதம் இதழ் – டிசம்பர், 2009

(http://rishantranslations.blogspot.com/2010/02/blog-post_15.html)

The Shoe

bebr118a

Soil filled
Mud covered
Brown colored
This shoe, Canvas
With lace untied

Might have awaken early morning
Having laces nicely tied
Might’ve been marking his steps to school

In the morning
When exercising–left, right, left
Might’ve waited on same spot
Have stood at ease for a moment
And again have stood on alert

Sometime
When gets an interval
Have run to the canteen
And might turned back again
Jumped to the ground
And might playfully played

This shoe, Canvas
Might have returned home
After his schooling
Amidst on his way home
Might have clattered a boot on
& when it’s removed in the dark day light
Might there’s a hidden little foot too in it.

Manjula Wediwardena
(Translated by Prashansani Paranawithana)

அது ”புதிய தமிழன்”

new tamilமஞ்சுல வெடிவர்தன – 90களில் நம்மோடு தென்னிலங்கையில் ஒன்றாக செயற்பட்ட இடதுசாரி செயற்பாட்டாளர். பல தடவைகள் சிறந்த நாவல், சிறந்த கவிதை, சிறந்த நாடகாசிரியர் போன்றவற்றுக்கான விருதுகளைப் பெற்றவர். மாற்றுப் பத்திரிகையாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். ”மரியா எனப்பட்ட மேரி” எனப்படும் இவரது சிறுகதை நூல் இலங்கையில் பெருத்த சர்ச்சைகளை கிளப்பிய கதை. அது இலங்கையில் தடைசெய்யப்பட்டது. தமிழ் மக்களுக்கெதிரான அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக நிறைய எழுதியவர், இயங்கியவர். ”அங்குலிமாலா”, ”நிமலராஜனின் அம்மாவுக்கு” போன்ற கவிதைகள் தமிழில் ஏற்கெனவே மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசித்திபெற்றவை. புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்கிற வீண்பழி சுமத்தப்பட்டு தேடப்பட்ட நிலையில் இலங்கையிலிருந்து தப்பி வந்து ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சொந்த மண்ணை இழந்த சிங்களவர்களின் பட்டியலில் இணைந்தபடி அவர் எழுதிய கவிதையொன்று இது. –
கவிதை மொழிபெயர்ப்பு – என்.சரவணன்

ஆம் உண்மை! நான் ஒரு சிங்களவன்
ஆம் சிங்களவன்
நான் ஒரு சிங்களவன்
தூய சிங்களவன்

சிங்களத்தில் காண
வேண்டிய கனவினை
தமிழில் காண விளைந்ததில்
தாய் நாட்டின் கதவுகள்
மூடப்பட்டன

நான் சிந்திப்பதும் சிங்களத்தி்ல்.
எம் மண்ணில்
துடைத்தெறியப்பட்டுக்கொண்டிருக்கும்
இறுதித் தமிழர் வரை
கவி வரைவேன் சிங்களத்தில்

சிங்களவனானதாலேயே
கவி எழுதும் என் கைகளிலும்
இரத்தக் கரைகள்
எழுதுகோலின் மையில் கூட – இரத்தம்

சிங்களத்தில் புன்னகைக்கத்தான் விருப்பம்
அதற்காகவே அதுவும் இயலவில்லை

சைவர் கடையில் சாப்பிடுகையில்
மனதளவில் முல்லைத்தீவைக் கைப்பற்றும்
நண்பனொருவன்
மின்னஞ்சலில்
உழுந்து வடையொன்றை அனுப்பி வைத்தான்

என் வாழ்வை வேரிடத்தில்
கழித்தாலும் பரவாயில்லை தோழனே!
தாய்நாட்டிலேயே
நாடு கடத்தப்பட்டவனாக
இருப்பதிலும்

இன்னொரு நவ கவி
அசை போடுகிறது
அதுவும் தமிழரைப் பற்றியது தான்
அது ”புதிய தமிழன்”
சிங்களத்தை நோக்கி சிரிக்கும் தமிழன்

நான் அவனுக்கு
சிங்களத்தில்
வாழ்த்து கூறுகிறேன்.

நிமலராஜனின் அம்மா

nimals mom

ஆத்மா மயங்கிக் கிடந்தது
நான் நிமலராஜனின்
அம்மாவுக்கு ஒரு
கடிதம் எழுதினேன்

ஒருபோதும் கண்டிராத
அன்பான அம்மா
உன்னைக் காணவும் ஆசை
உன்னைக் கண்டு வருவதற்கும்
இவர்கள் எமக்கு இடம்
தர மாட்டார்கள்
தாய்மார்களைக் கூட
இங்குள்ளோர் தெரியாதவர்கள்

அவள் அனுப்பிய கடிதத்தில்
எனை விளித்திருந்தாள்
”மகனே உன் கையெழுத்தும்
நிமலனின் கையெழுத்து போன்றதே
உனைக் காண ஆசை”

அவளது கடித்தில்
எனது ஆத்மா மீண்டுமொருமுறை
உற்சாகம் கொண்டது
அனைத்து ”வெரியல்” களையும்
தாண்டி நான்
காணச்சென்றேன் அவளை

அவளின் அன்பின் முன்
விழுந்து முத்தமிட்டேன்
அவளது வெடித்த பாதங்களை

’அம்மா உன் பாதங்கள்
என் தாயின் போன்றவையே!’
குனிந்து ஸ்நேகமாய்
விரல் கொண்டேன் – தலை
கோதினாள்

’மகனே உன் சிரசு
நிமலின் போன்றதே’
நிமிர்ந்து நானவள்
முன் நின்றேன்
’அம்மா உன் பாசக் கைகள்
என் தாயின் போன்றவையே.

ஆசையால் கண்ணிமைக்காமல்
எனையவள் பார்த்து
கொண்டிருந்தாள்
சிரிக்க நான் முயன்றேன்
’மகனே உன் சிரிப்பு
நிமலராஜனின் அம்மா

ஆத்மா மயங்கிக் கிடந்தது
நான் நிமலராஜனின்
அம்மாவுக்கு ஒரு
கடிதம் எழுதினேன்

ஒருபோதும் கண்டிராத
அன்பான அம்மா
உன்னைக் காணவும் ஆசை
உன்னைக் கண்டு வருவதற்கும்
இவர்கள் எமக்கு இடம்
தர மாட்டார்கள்
தாய்மார்களைக் கூட
இங்குள்ளோர் தெரியாதவர்கள்

அவள் அனுப்பிய கடிதத்தில்
எனை விளித்திருந்தாள்
”மகனே உன் கையெழுத்தும்
நிமலனின் கையெழுத்து போன்றதே
உனைக் காண ஆசை”

அவளது கடித்தில்
எனது ஆத்மா மீண்டுமொருமுறை
உற்சாகம் கொண்டது
அனைத்து ”வெரியல்” களையும்
தாண்டி நான்
காணச்சென்றேன் அவளை

அவளின் அன்பின் முன்
விழுந்து முத்தமிட்டேன்
அவளது வெடித்த பாதங்களை

’அம்மா உன் பாதங்கள்
என் தாயின் போன்றவையே!’
குனிந்து ஸ்நேகமாய்
விரல் கொண்டேன் – தலை
கோதினாள்

’மகனே உன் சிரசு
நிமலின் போன்றதே’
நிமிர்ந்து நானவள்
முன் நின்றேன்
’அம்மா உன் பாசக் கைகள்
என் தாயின் போன்றவையே.

ஆசையால் கண்ணிமைக்காமல்
எனையவள் பார்த்து
கொண்டிருந்தாள்
சிரிக்க நான் முயன்றேன்
’மகனே உன் சிரிப்பு
நிமலனின் போன்றதே’

உடன் அவள் விழிகளில்
மெல்லிய நீர்க் கோடுகள்
விழித்து வந்தன.
’அம்மா இந்தக் கண்ணீர்
என் அம்மாவின் போன்றதே’!

தமிழில் – இப்னு அசூமத்
நிமலனின் போன்றதே’

உடன் அவள் விழிகளில்
மெல்லிய நீர்க் கோடுகள்
விழித்து வந்தன.
’அம்மா இந்தக் கண்ணீர்
என் அம்மாவின் போன்றதே’!

தமிழில் – இப்னு அசூமத்

நான் லிங்கமாலா ஆனேன்

sadnessஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை.

வெசாக்தின முழுநிலவு தலையில்
கைவைத்து அழுகிறது
அதன் மூக்குச் சளி
சாரளம் வழியால்
தெறிக்கின்றது

அயல் வீட்டில்
இன்னும் வாடவில்லை

ஐந்நூற்று ஐம்பது
புராணக் கதைகளை
சுருக்கி, நவீனப்படுத்தி
தூரத்தில் அமைத்த
வெசாக் பந்தலில்
இடைக்கிடை
விருது பாடுவது கேட்கின்றது

என்முன்
வெற்றுக் காகிதத் தாள்
கவிதைக்காக
விழித்திருக்கின்றது
சடுதியாக எங்கிருந்தோ
மிதந்து வந்த
இறைச்சித் துண்டமொன்று
காகிதத்தில் வீழ்ந்து
யோனியின் வடிவமைந்தது
கோணேஸ்வரியினுடையது

அம்பாறையிலிருந்து
கொழும்பு வர
இத்தனை நாளா?

எவ்வளவு தூரத்தில்
நம்
கண்களில் கண்ணீர்
குளிர்கின்றது

கண்ணீருக்கு மத்தியில் நான்
அங்குலி மாலாவாக அல்ல
லிங்க மாலா வாகினேன்
எனக்கு விரல்கள்
தேவையில்லை
ஆண்குறிகளே தேவை

வெகு பக்தியாக வலது கரத்தில்
இறைச்சியையும்
மறு கரத்தில் இறுக்கமாக
ஆயுதத்தினையும்
எடுத்துப் புறப்படலானேன்

வழியில் சந்திக்கும்
வீடுகளை தட்டி
சகல சிங்கள ஆண் குறிகளையும்
வெட்டி நூலாகக் கோர்த்து
இறுதியில் எனது
ஆ……….

வேதனையை தாங்கிக் கொண்டு
ஸ்ரீபாத மலையின் கழுத்திற்கு
ஆண்குறிகளை மாலையாய்
சூட்டினேன்

என்னை தடுத்து நிறுத்த போதி
மாதவன் இல்லாததால்
நான் இதனைச் செய்தேன்

சகோதர பாசமற்ற
உணர்வு அற்ற
இனம் ஒன்று எதற்கு

என் முன் வெற்றுக்
காகிதம் அதன் மீது
இரத்தக்கறை
இது ஒரு தமிழ்க் கவிதை
அதனால் சிங்களவருக்கு
இது புரியவில்லை