நிமலராஜனின் அம்மா

nimals mom

ஆத்மா மயங்கிக் கிடந்தது
நான் நிமலராஜனின்
அம்மாவுக்கு ஒரு
கடிதம் எழுதினேன்

ஒருபோதும் கண்டிராத
அன்பான அம்மா
உன்னைக் காணவும் ஆசை
உன்னைக் கண்டு வருவதற்கும்
இவர்கள் எமக்கு இடம்
தர மாட்டார்கள்
தாய்மார்களைக் கூட
இங்குள்ளோர் தெரியாதவர்கள்

அவள் அனுப்பிய கடிதத்தில்
எனை விளித்திருந்தாள்
”மகனே உன் கையெழுத்தும்
நிமலனின் கையெழுத்து போன்றதே
உனைக் காண ஆசை”

அவளது கடித்தில்
எனது ஆத்மா மீண்டுமொருமுறை
உற்சாகம் கொண்டது
அனைத்து ”வெரியல்” களையும்
தாண்டி நான்
காணச்சென்றேன் அவளை

அவளின் அன்பின் முன்
விழுந்து முத்தமிட்டேன்
அவளது வெடித்த பாதங்களை

’அம்மா உன் பாதங்கள்
என் தாயின் போன்றவையே!’
குனிந்து ஸ்நேகமாய்
விரல் கொண்டேன் – தலை
கோதினாள்

’மகனே உன் சிரசு
நிமலின் போன்றதே’
நிமிர்ந்து நானவள்
முன் நின்றேன்
’அம்மா உன் பாசக் கைகள்
என் தாயின் போன்றவையே.

ஆசையால் கண்ணிமைக்காமல்
எனையவள் பார்த்து
கொண்டிருந்தாள்
சிரிக்க நான் முயன்றேன்
’மகனே உன் சிரிப்பு
நிமலராஜனின் அம்மா

ஆத்மா மயங்கிக் கிடந்தது
நான் நிமலராஜனின்
அம்மாவுக்கு ஒரு
கடிதம் எழுதினேன்

ஒருபோதும் கண்டிராத
அன்பான அம்மா
உன்னைக் காணவும் ஆசை
உன்னைக் கண்டு வருவதற்கும்
இவர்கள் எமக்கு இடம்
தர மாட்டார்கள்
தாய்மார்களைக் கூட
இங்குள்ளோர் தெரியாதவர்கள்

அவள் அனுப்பிய கடிதத்தில்
எனை விளித்திருந்தாள்
”மகனே உன் கையெழுத்தும்
நிமலனின் கையெழுத்து போன்றதே
உனைக் காண ஆசை”

அவளது கடித்தில்
எனது ஆத்மா மீண்டுமொருமுறை
உற்சாகம் கொண்டது
அனைத்து ”வெரியல்” களையும்
தாண்டி நான்
காணச்சென்றேன் அவளை

அவளின் அன்பின் முன்
விழுந்து முத்தமிட்டேன்
அவளது வெடித்த பாதங்களை

’அம்மா உன் பாதங்கள்
என் தாயின் போன்றவையே!’
குனிந்து ஸ்நேகமாய்
விரல் கொண்டேன் – தலை
கோதினாள்

’மகனே உன் சிரசு
நிமலின் போன்றதே’
நிமிர்ந்து நானவள்
முன் நின்றேன்
’அம்மா உன் பாசக் கைகள்
என் தாயின் போன்றவையே.

ஆசையால் கண்ணிமைக்காமல்
எனையவள் பார்த்து
கொண்டிருந்தாள்
சிரிக்க நான் முயன்றேன்
’மகனே உன் சிரிப்பு
நிமலனின் போன்றதே’

உடன் அவள் விழிகளில்
மெல்லிய நீர்க் கோடுகள்
விழித்து வந்தன.
’அம்மா இந்தக் கண்ணீர்
என் அம்மாவின் போன்றதே’!

தமிழில் – இப்னு அசூமத்
நிமலனின் போன்றதே’

உடன் அவள் விழிகளில்
மெல்லிய நீர்க் கோடுகள்
விழித்து வந்தன.
’அம்மா இந்தக் கண்ணீர்
என் அம்மாவின் போன்றதே’!

தமிழில் – இப்னு அசூமத்

ප්‍රතිචාරයක් ලබාදෙන්න

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

ඔබ අදහස් දක්වන්නේ ඔබේ WordPress.com ගිණුම හරහා ය. පිට වන්න /  වෙනස් කරන්න )

Twitter picture

ඔබ අදහස් දක්වන්නේ ඔබේ Twitter ගිණුම හරහා ය. පිට වන්න /  වෙනස් කරන්න )

Facebook photo

ඔබ අදහස් දක්වන්නේ ඔබේ Facebook ගිණුම හරහා ය. පිට වන්න /  වෙනස් කරන්න )